ண்டன்

ர்ச்சைக்குரிய ”பத்மாவதி” இந்தித் திரைப்படத்தை பிரிட்டனில் வெளியிட பிரிட்டன் தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ளது.

“பத்மாவதி” இந்தித் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.   இந்தப் படம் இன்னும் இந்திய தணிக்கை வாரியத்தால் அனுமதிக்கப் படவில்லை.  குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.  வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிட வேண்டிய இந்தப் படத்தின் வெளியீட்டை பட நிறுவனம் தள்ளி வைத்துள்ளது.

இதற்கிடையே லண்டனில் இந்த திரைப்படத்துக்கு பிரிட்டன் தணிக்கை வாரியம் திரையிட அனுமதி அளித்துள்ளது.  இந்த திரைப்படத்துக்கு 12 ஏ என சான்றிதழ் அளித்துள்ளது. 12 ஏ சான்றிதழ் அளிக்கப் பட்ட படங்களுக்கு 12 வயதுக்குட்பட்டவர்கள் பெரியவர்களுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.  அது மட்டுமின்றி படத்தில் எந்தக் காட்சிகளும் நீக்கப்படவில்லை.