லண்டன் :

 

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் போயிங் 747 – 436 கடந்த சனிக்கிழமை இரவு நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு பயணமானது.

இந்த விமானம் நியூயார்க் – லண்டன் இடையிலான 5585 கி .மீ. தூரத்தை 4 மணி 56 நிமிடத்தில் கடந்து சாதனை புரிந்துள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள “ஸ்டார்ம் சியாரா” புயல் ஏற்படுத்திய வானிலை மாற்றமே இந்த விமானம் வேகமாக கடந்து செல்ல மற்றொரு காரணமாக இருந்துள்ளது.

வழக்கமாக 6 மணி 13 நிமிடத்தில் லண்டனை வந்தடையும் இந்த விமானம் சுமார் 80 நிமிடம் முன்னதாக வந்து சேர்ந்தது பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து விமான நிறுவன செய்தியாளர் கூறுகையில் “பயணிகளின் பாதுகாப்பே எங்களது முதல் குறிக்கோள், வழக்கமாக பயணிகளை உரிய நேரத்திற்கு முன் கொண்டு சேர்க்கும் நோக்குடன் இயங்கியதே இதற்கு காரணம்” என்றார்

“ஸ்டார்ம் சியாரா” புயல் ஏற்படுத்திய மாற்றத்தால் 35000 அடி உயரத்தில் பறந்த போயிங் 747 – 436 விமானம், மணிக்கு 1327 கி.மீ. வேகத்தை எட்டியது, இது ஒலியை விட கூடுதல் வேகத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்தது.

இதற்கு முன், ஒலியை விட கூடுதலாக செல்லக்கூடிய கான்கார்ட் விமானம் சேவையில் இருந்த போது, 1996ம் ஆண்டு பிப்ரவரி 7ந் தேதி , இதே வழித்தடத்தில் 2 மணி 53 நிமிடத்தில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]