அரச குலத்துக்கு அடுத்த வாரிசு வருகிறது….

Must read

ண்டன்

பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேத் தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கப் போவதாக அரண்மனைக் குறிப்பு தெரிவிக்கிறது.

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் பேரனும்,  சார்லஸ்ஸின் மகனுமான இளவரசர் வில்லியம் மற்றும் கேத் தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.  வில்லியம் ட்யூக் ஆஃப் கேம்ப்ரிட்ஜ் எனவும் கேத் ட்யூசெஸ் ஆஃப் கேம்ப்ரிட்ஜ் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.  தற்போது வில்லியம் – கேத் தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது.  இதை அரண்மனையிலிருந்து வெளியான அறிவிப்பு உறுதி செய்துள்ளது.

அவர்களின் அரண்மனை நிர்வாகம் கேத் தற்போது மூன்றாம் முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், மேலும் அவருக்கு அதிகம் வாந்தி தொந்தரவு இருப்பதால் அவர் பங்கு பெற இருந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. தவிர இது குறித்து அரசியாரும், மற்றும் இளவரசர் – இளவரசி ஆகிய இருவரின் குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அந்த தகவல் குறிப்பு கூறுகின்றது.

More articles

Latest article