வாடிகன்: உடல்நலம் தேறி வாடிக்கனில் இருக்கும் போப் பிரான்சிஸ்-ஐ இங்கிலாந்து மன்னர் சார்லஸ் திடீரென சென்று நலம் விசாரித்தார்.

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் ( 88 வயது) வயது முதிர்வு காரணமாக சுவாசம் விடுவதில் கஷ்டப்பட்டு வந்தார். இதையடுத்து, பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் போப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இருப்பதாகவும், நிமோனியா பாதிப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், அவரது நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைடுத்து அவரது நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 5 வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மார்ச் 23ந்தேதி அன்று டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து வாடிகனில் தங்கியிருந்து ஓய்வுஎடுத்து வருகிறார்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தம்பதியினர் நேற்று (ஏப்ரல் 9ந்தேதி) அன்று திடீரென வாடிகன் சென்று கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் சந்தித்தனர். அப்போது அவரது உடல்நலம் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு போப் பிரான்சிஸ்-ஐ இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கமிலா தம்பதியினர் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.