லண்டன்: பிரிட்டனில் 44 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தேசிய சுகாதார சேவை மையம் அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, இந்தியா என பல நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந் நிலையில் பிரிட்டனில் 44 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்கள் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இந்த பிரிவை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள் என்றும் பிரிட்டிஷ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெயரை பதிவு செய்த பின்னர் தடுப்பூசி போடும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.