லண்டன்
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பார்கள் என்பது தங்களுக்கு தெரியும் எனப் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேச நாடுகள் படைகள் வெளியேறுவதாக அறிவித்த உடன் தாலிபான்கள் சிறிது சிறிதாக நாட்டை வசப்படுத்தி ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை அகற்றி இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசைக் கொண்டு வருவதாக அறிவித்து செப்டம்பர் 8 ஆம் தேதி அமைச்சரவை பட்டியலை அறிவித்தனர்.
தாலிபான்கள் ஆட்சியில் மக்களுக்கு கடும் அச்சம் உள்ளதால் நாட்டை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர். தாலிபான்கள் பொதுமக்களிடம் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டு கொண்டும் மக்கள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. அதே வேளையில் தாலிபான் அரசைப் பல உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்காமல் உள்ளது.
தாலிபான்கள் குறித்து பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன், “ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது படையைத் திரும்பப் பெறுவதாகக் கூறிய போதே தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என அறிந்திருந்தோம். அவர்கள் புது ஆட்சி அமைப்பார்கள் என்பது எங்களுக்கு தெரிந்த ஒன்றுதான். இந்த அரசு ஆதிக்கம் செலுத்தும் அரசாக அமையும் என மதிப்பிட்டு இருந்தோம்” எனக் கூறி உள்ளார்.