பிரிஸ்பேன்:
ஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பரவும் கொரோனா பரவலை அடுத்து பிரிஸ்பேனில் இன்று மாலை 5 மணி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இதுகுறித்து குயின்ஸ்லாந்து பிரீமியர் அனாஸ்டாசியா பாலாஸ்ஸ்குக் தெரிவிக்கையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக கூறினார்.

கிரேட்டர் பிரிஸ்பேனில் அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, பிரிஸ்பேன், லோகன், மோர்டன் பே, இப்ஸ்விச் மற்றும் ரெட்லேண்ட்ஸ் பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் நாளை முதல் மூடப்படும் என்றும், ஆனால் அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் முககவசம் அணிவது மாநிலத்தில் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜீனெட் யங் தெரிவித்துள்ளார்.