சுரேந்திரநகர்
குஜராத் மாநிலத்தில் திடீரென பாலம் இடிந்து விழுந்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அம்மாநிலத்தின் சுரேந்திரநகர் மாவட்டம் சொலிடா நகரையும் ஹபிஹாசிர் நகரையும் ஒரு பாலம் இணைக்கிறது. மாநிலத்தின் முக்கிய தரைவழிப் போக்குவரத்து பாலங்களில் போஹலோ ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலமும் ஒன்றாகும்/
தற்போதைய கனமழை காரணமாக போஹவோ ஆற்றில் க்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கடும் வெள்ளப்பெருக்கால் நேற்று சொலிடா நகரையும் ஹபிஹாசிர் நகரையும் இணைக்கும் பாலம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது.
குஜராத் மாநில மக்கள் பலர் இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆயினும் இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. காவல்துறையினர் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.