
சிவகாசி
விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்ட போராட்டம் இன்று நடைபெறுகிறது. இதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
விஜயகாந்த் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா ஆகியோரை விமர்சித்தார். அப்போது மேடை நோக்கி ஒரு செங்கல் வந்து விழுந்தது.
கல் வீசியது யார் என போலீசார் தேடி வருகின்றனர். இந்த கல்வீச்சு சம்பவம் அங்கு கடும் பரபரப்பை உண்டாகி இருக்கிறது.
[youtube-feed feed=1]