மும்பை
பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிரெயின் லாரா நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் லாரா என அழைக்கப்படும் பிரெயின் லாரா மேற்கிந்திய தீவுகளை சேர்ந்தவர். இவர் 1969 ஆம் வருடம் மே மாதம் 2 ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவர் வலது கை பவுலர் மற்றும் பேட்ஸ்மென் ஆவார்.
இவர் தற்போது கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் டனது கடைசி டெஸ்ட் போட்டியை 2006 ஆம் வருடமும், கடைசி ஒரு நாள் போட்டியை 2007 ஆம் வருடமும் விளையாடி உள்ளார்.
இன்று மதியம் கடுமையான நெஞ்சு வலி காரனமாக பிரெயின் லாரா மும்பையில் பரேல் பகுதியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்
இது குறித்த அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிட உள்ளது