லண்டன்:

நான்கு ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு,  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து இன்று அதிகாரப்பூர்வ மாக வெளியேறுகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை இங்கிலாந்து கடந்த 2016ம் ஆண்டு எடுத்தது. அது தொடர்பான பிரெக்ஸிட் மசோதாவை அப்போதய பிரதமர் தெரசாமே தாக்கல் செய்தார். ஆனால், அது நிறைவேறாததால், இழுபறி நீடித்து வந்தது.”பிரெக்ஸிட்”க்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக தேரசாமே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு பதவிக்கு  வந்த போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.   இதில் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றார்.  இதனால் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில்,  இன்று ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து  முறைப்படி வெளியேறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரெக்ஸிட்  இன்று நிகழ்கிறது.