சென்னை:
பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூன்று முறை கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில் அணிக்காக வென்று கொடுத்தவர் பீலே. கால்பந்து உலகின் கடவுள் என்ற் போன்றப்படும் பீலே, 17 வயதில் உலகக்கோப்பையை வென்றவர், இளம் வயதில் உலகக்கோப்பை ஹாட்ரிக் அடித்தவர், இளம் வயதில் உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியவர் என்று பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வரும் சூழலில், 1958, 1962, 1970 களில் நடந்த மூன்று உலகக்கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பீலேவின் சாதனை ரசிகர்களிடையே ஆச்சரியத்துடன் நினைவு கூறப்பட்டு வருகிறது.

82 வயதாகும் பீலேவுக்கு குடல் பகுதியில் ஒரு புற்றுநோய் கட்டி இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது. இதன்பின்னர் பீலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து இதய செயலழிப்பு மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் கால்பந்து ஜாம்பவான் பீலே அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் திடீரென பீலே, ஆல்பர்ட் எய்ன்ஸ்டின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், பீலேவுக்கு பெரிய பிரச்சினைகள் இல்லை. விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.