போர்ட் ஆப் ஸ்பெயின்: டி-20 கிரிக்கெட்டில் முதன்முதலாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய சாதனையாளர் என்ற மைல்கல்லை எட்டினார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ.
வெஸ்ட் இண்டீஸில் தற்போது சிபிஎல் டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நைட் ரைடர்ஸ் – செயின்ட் லூசியா அணிகள் மோதின. இதில், செயின்ட் லூசியா அணிக்காக விளையாடுகிறார் பிராவோ.
இப்போட்டியில், நைட் ரைடர்ஸ் அணியின் கார்ன்வல்லை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், டி-20 அரங்கில் தனது 500வது விக்கெட்டைக் கைப்பற்றினார் பிராவோ. இவர் மொத்தம் 459 போட்டிகளில் ஆடி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மொத்தம் 1201 எதிரணி வீரர்களுக்காக இவர் இதுவரை ஆடி, 312 வெவ்வேறு வீரர்களை அவுட்டாக்கியுள்ளார். இதில், அதிகபட்சமாக பொல்லார்ட் 9 முறை இவரிடம் சிக்கியுள்ளார்.