சென்னை: தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2003-ம் ஆண்டு நடிகர்கள் அருண்விஜய், ஷியாம் நடிப்பில் வெளியான ’இயற்கை’ படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன். தொடர்ந்து ’ஈ’, ’பேராண்மை’, ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என பல படங்களை இயக்கியுள்ளார்.
கம்யூனிசத்தில் ஆர்வமுள்ளவரான ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் எடிட்டிங் பணிகளில் நேற்று இருந்தவர் மதியம் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனது இல்லத்துக்குச் சென்றுவிட்டு திரும்புவதாக கூறி சென்றிருக்கிறார். ஆனால், அவர், நீண்டநேரமாகியும் எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு திரும்பாததால் அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்றுபார்த்தபோது, கதவு திறந்த கிடந்த நிலையில், அவர் வீட்டில் மயங்கிய கிடந்துள்ளார்.
உடனே அவரை அப்போவில் அனுமதித்துள்ளனர். அவரக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.