மவுண்ட் அபு
பிரம்ம குமாரிகள் தங்கள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகியின் உடலை அரசு உத்தரவுப்படி ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தகனம் செய்தனர்.
உலகெங்கும் சுமார் 4500 கிளைகளைக் கொண்ட பிரம்மகுமாரிகள் இயக்கத்துக்கு 147 நாடுகளில் சுமார் 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். பிரம்ம குமாரிகள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகி ஆவார். தாதி ஜானகி உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆன்மீக சேவையில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு வயது 104 ஆகிறது.
வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்ட தாதி ஜானகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார். இவருடைய மரணத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது உடல் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் நடந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் மூன்றாம் நாளாகும். ஆகவே மத்திய அரசு உத்தவுப்படி பிரம்மகுமாரிகள் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தாதி ஜானகியின் உடலைத் தகனம் செய்துள்ளனர்.