நெட்டிசன்:
நாகமணி லோகேந்திரலிங்கம் (Nagamany Logendralingam) அவர்களின் முகநூல் பதிவு:
கனடாவில் தமிழ்த் தேசியம் அல்லது தமிழின விடுதலை அல்லது தமிழர்களின் தனித்துவம் ஆகியவற்றை தமது கொள்கைகளாகவும் கோட்பாடுகளாகவும் கொண்டு இயங்கும் கனடிய தமிழர் காங்கிரஸ், கனடிய தமிழர் தேசிய அவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய அமைப்புக்கள் நடத்தும் வருடாந்த இராப்போசன விருந்து வைபவங்களில் தாராளமாக வைன் போத்தல்கள் மேசைகளில் அழகுப் பொருட்களாக வைக்கப்படுகின்றன.
அங்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல மட்டங்களின் அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுவதால் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர்களுக்கு வைன் போத்தல்கள் வைக்கப்பட வேண்டும் என்று நியாயம் கற்பிக்கப்படுகின்றது..
ஆனால் அந்த கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவருமே அந்த வைன் பானத்தை அருந்துவதில்லை.
அவர்கள் அனைவருமே அழைக்கப்பட்டோம் பேசினோம், போனோம் என்று ”பை” சொல்லிவிட்டு போய்விடுகின்றார்கள்
.இந்த நேரத்தில் எமக்கு ஞாபகத்திற்கு வருபவர்கள் எமது மக்களின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் முக்கிய தலைவர்களே ஆகும். அவர் தங்கள் இறுதிப் போர்க் காலங்களில் தண்ணீர் கூட கிடைக்காமல் உயிர் விட்டார்கள்.
ஆமாம் தமிழீழ விடுதலையும் தமிழ்த் தேசிய போராட்டமும் கண்ணீரோடு தான் கழிகின்றன.
இவை கவலைக்குரிய நடவடிக்கைகளே! இதைத் தட்டிக்கேட்கும் அளவிற்கு தைரியம் இல்லாதவர்கள் தங்கள் வீடுகளு்க்குள்ளேயே இருந்து விடலாம்.