டெல்லி

திர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்ற இரு அவைகளும் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Glimpses of the new Parliament Building, in New Delhi

கடந்த 25 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனவே மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின.

கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியபோது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

எனவே இதனை தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்துள்ளார். அதாவது இரு அவைகளும் டிசம்பர்.2 ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.