தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுகவினர் பிப்ரவரி 17-ம் தேதி முதல் வருகின்ற 24 -ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றும் ரூ.25,000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார் .
ஒருவேளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெறுவேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அந்த ஐந்து ஆண்டுகளும் சினிமாவில் நடிக்க மாட்டேன். சென்னைக்கு வரமாட்டேன், தொகுதிக்காக முழுமையாக பாடுபடுவேன்” என தெரிவித்தார்.