சென்னை

நேற்று நடந்த ஒரு விழாவில் நடிகர் சூர்யாவ அரசியலுக்கு வருமாறு நடிகர் போஸ் வெங்கட் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் சூர்யா நடிப்பில், அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல் ஆகியோருடன், நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா நடிப்பில் இதுவரை இல்லாத வகையில் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டூயோகிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

நேற்று கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான சார் என்ற படத்தை இயக்கிய இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட், கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

போஸ் வெங்கட் தனது உரையில்,

”யூடியூப்பில் தற்போது அரசியல் தான் அதிகம் பேசப்படுகிறது. அதனால் இந்த மேடையில் கொஞ்சம் அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன். ஒரு நடிகர் தனது ரசிகர்களை வழிநடத்த வேண்டும். அதுவும் உங்களை போல் வழிநடத்த வேண்டும்  

தர்மம் செய்ய இப்போதே சொல்லிக்கொடுத்துவிட வேண்டும். உதவி மற்றும் மக்களின் பிரச்சனைகளை எப்படி கவனிக்க வேண்டும்எ என்பதை இப்போதே சொல்லிக் கொடுத்துவிட வேண்டும். நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும், உங்களுக்கு அறிவையும், படிப்பையும் கொடுத்துவிட வேண்டும்.

அதன்பிறகு அரசியலுக்கு வர வேண்டும். ஒரு தலைவன் எங்கிருந்து வேண்டுமானாரும் வரலாம். ஆனால் தலைவன் அவரது ரசிகர்களை அறிவாளியாக வைத்திருக்க வேண்டும்.  ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை கொடுக்க வேண்டும். அதன்பிறகு அரசியலுக்கு வர வேண்டும்.

அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். தமிழ் திரையுலகில் கமல்சாருக்கு அப்புறம், இவ்வளவு நுனுக்கமான ஒரு நடிகரை பார்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறீர்கள். நிறைய நடித்து எங்களுக்கு திருப்திகரமான திரைப்படங்களை கொடுத்த பிறகு நீங்கள் கட்டாயமாக அரசியலுக்கு வர வேண்டும் ”

என்று கூறியுள்ளார்.