லண்டன்
தன் உயிரை கோரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்கள் பெயரை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது குழந்தைக்குச் சூட்டி உள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இவர் தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவர் உடல்நிலை மோசமானதால் லண்டன் நகரில் உள்ள புனித தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சுமார் 10 நாட்கள் சிகிச்சை பெற்ற போரிஸ் ஜான்சன் மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
தற்போது 55 வயதாகும் போர்ஸ் ஜான்சன் தன்னை விட 23 வயதான கேரி சிம்ம்ன்ஸ் என்பவரைத் திருமணம் செய்துக் கொள்வதாக க்டந்த ஆண்டு அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவர்களுக்குக் கடந்த புதன்கிழமை ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு லாரி நிகோலஸ் ஜான்சன் என போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சிம்மன்ஸ் பெயர் சூட்டி உள்ளனர்.
இது குறித்து கேரி சிம்மன்ஸ், “கடந்த புதன் கிழமை எனக்கும் போரிஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு நாங்கள் லாரி நிகோல்ஸ் ஜான்சன் எனப் பெயர் சூட்டி உள்ளோம். போரிஸ் ஜான்சன் உயிரை கொரோனாவில் இருந்து காத்த இரு மருத்துவர்களின் பெயர்கள் நிக் பிரைஸ் மற்றும் நிக் ஹார்ட் ஆகும்.
எனது முன்னோர் பெயரான லாரி, போரிஸ் முன்னோர் பெயரான ஜான்சன் ஆகியவற்றுடன் மருத்துவர்கள் பெயரான நிகோலஸை இணைத்து குழந்தைக்கும் லாரி நிகோலஸ் ஜான்ச்ன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் எனது மகப்பேற்றுக்கு மருத்துவம் பார்த்த என் எச் எஸ் மருத்துவமனைம்ருத்துவர்களுக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.