ண்டன்

ங்கிலாந்து பிரதம போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸ் என்பவரை ரகசிய  திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இருமுறை திருமணம் ஆனவர் ஆவார். அவர்கள் இருவரையும் ஜான்சன் விவாகரத்து செய்துள்ளார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸ் உடன் ஒன்றாகத் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.   அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்தனர்.  இந்நிலையில் இங்கிலாந்து ஊடகங்கள் இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளதாகப் படங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளது.

லண்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த இந்த திருமணத்தில் மிகவும் குறைவன நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவலில் கூறப்பட்டுள்ளது.   இந்த செய்தி வெளியானதையொட்டி பலரும் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி சைமண்ட்ஸ் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.