தமிழ்நாட்டின் மலையேற்ற வழித்தடங்களுக்கு செல்ல உதவும் ‘ட்ரெக் தமிழ்நாடு’ என்ற இணையதளத்தை துணை முதல்வர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார்.
வழிகாட்டிகள் மூலம் பாதுகாப்பான மலையேற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ட்ரெக் தமிழ்நாடு http://trektamilnadu.com என்ற ஆன்லைன் போர்ட்டல் மூலம் மாநிலத்தின் வழிகாட்டப்பட்ட இயற்கை பாதைகளை முன்பதிவு செய்யலாம்.
124 அடையாளம் காணப்பட்ட வனப் பாதைகளைக் கொண்ட இந்த முயற்சி, பொறுப்பான மலையேற்றத்திற்காக 40 வழித்தடங்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கும்.
டிரெக்கிங் செய்பவர்களுடன் பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் மூலம் பாதுகாப்பை ஊக்குவிப்பது மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதள முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.