புதுடெல்லி:
ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78  நாட்கள் சம்பளம் போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
railway
ரெயில்வே துறையில் குரூப் சி, டி பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
இன்று நடைபெற்ற மத்திய  அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார்.
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 12 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம், ரெயில்வேக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் செலவினம் ஆகும்.
கடந்த ஆண்டு, ரெயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச போனஸ் தொகையாக ரூ.8,975 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.