ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள்.

தற்போது அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பதிவில் “வணக்கம். எங்கள் ‘வலிமை’ படத்தின் மீதான நீங்கள் காட்டும் அன்பு மகிழ்ச்சியளிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதற்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருவதால் பொறுத்துக் கொள்ளுங்கள். இது படத்தின் நலனுக்காகவே” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.