பர்வானி:
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலின்போது நாசவேலைக்காக ஈடுபட இதை பதுக்கி வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தலை யொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், ம.பி.யில் உள்ள கார்கேனே பாராளுமன்ற தொகுதிக்கு மே 19ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்தலில் கலவரம் ஏற்படலாம் என்ற தகவலை தொடர்ந்து, மாநில காவல் துறையினர் சேத்வா டவுன் பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் சஞ்சய் யாதவுக்கு சொந்தமாd தாருகொடம் பகுதியில் உள்ள வீட்டில் மாவட்ட எஸ்பி தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது, அவரது வீட்டில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகி தோட்டக்கள் கைப்பற்றப்பட்டது. அதில் 17 சக்தி மிகுந்த வெடிகுண்டுகள், 10 கைத்துப்பாக்கிகள் மற்றும் 111 தோட்டக்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த எஸ்.பி., யாங் சென் டோல்கார் புட்டியா, கைப்பற்றப் பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்து வெளிநாட்டை சேர்ந்தது என்றும், இது தொடர்பாக, சஞ்சய் யாதவ், சாஹர் சவுத்திரி, தீபக், ஹிரிதிக் ஆகியோர் மீது வெடிகுண்டு பதுக்கிய குற்றப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது என்று கூறினார். மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தவர், தேர்தல் நேரத்தில் ஏதேனும் நாச வேலைக்கு திட்டமிட்டுள்ளரான என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
சஞ்சய் யாதவ் மீது கோர்ட்டுக்குள் சென்று எதிராளிமீது துப்பாகி சூடு நடத்திய குற்றச்சாட்டு உள்பட 47 கிரிமினல் வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் புகழ்பெற்றவர் சஞ்சய் யாதவ்வை எதிர்த்து யாரும் ஏதும் பேச முடியாது என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், சஞ்சய் யாதவ், தனது சேகாதரர் ஜிட்டு மற்றும் அவரது தாயார் பசந்திபாய் யாதவ் உடன் பாஜகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து கடந்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சேத்வா நகராட்சிக்கு அவரது தாயார் பசந்திபாய் போட்டியிட்டார்.
ஆனால், சஞ்சய் யாதவ் மீது உள்ள பயம் காரணமாக அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவரது தாயார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.