மும்பை:
மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஷாருக் இன்று அதிகாலை 3.30 மணி வரை விசாரணை நடத்தினார்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனால் நேற்று முக்கிய வழக்குகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. இந்த வகையில் மும்பை உயர்நீதிமன்றத்திலும் முக்கிய வழக்குகளின் விசாரணை நடந்தது.
இந்நிலையில் காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கிய நீதிபதி ஷாருக் ஜே. கதவாலா மட்டும் மறுநாள் அதிகாலை (இன்று) 3.30 மணிவரை விசாரணை நடத்தினார். நூறுக்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் பல வழக்கறிஞர்களும், சட்ட நிபுணர்களும், மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர். மேலும் இந்த நீதிபதி கடந்த 2 வாரத்திற்கு முன்பு நள்ளிரவு வரை விசாரணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.