மும்பை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படிய மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது குறித்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன், மும்பை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மகாராஷ்டிரா தகவல்ஆணையத்திடம் கேள்வி மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலைசெய்யப்பட்டது எப்படி என்பதை அறிந்துகொள்ள பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். இது தொடர்பான சரியான தகவல்களை தகவல் ஆணையம் கொடுக்க முன்வராத நிலையில், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சஞ்சய் தத் எவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.இந்த மனு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கே. தேதத், ஆர்.ஐ. சக்லா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் ஆஜஜைரான வழக்கறிஞர், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் எவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக மகாராஷ்டிர சிறைத் துறை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேட்டிருந்தோம். அவர்கள் தகவல் தர மறுத்து விட்டனர். அதுபோல, மகாராஷ்டிர தகவல் ஆணையமும் முறையான பதில் அளிக்க மறுத்து விட்டது. எனவே, நீதிமன்றத்துறை மீதான நம்பிக்கைக்கொண்டு மும்பை நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இதையடுதது, குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சஞ்சய் தத் எவ்வாறு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? அதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க மகாராஷ்டிர தகவல் ஆணையத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.