மும்பை

மெயில் வழியே மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் சென்னை, பாட்னா மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 41 விமான நிலையங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது. தீவிர சோதனைக்கு பின்னர் இந்த மிரட்டல் புரளி என பின்னர் தெரிய வந்தது.

நேற்று மராட்டியத்தின் மும்பை பெருநகர மாநகராட்சி தலைமையகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என மிரட்டல் விடுத்து இ-மெயில் ஒன்று வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மெயிலில் தலைமையகம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று மர்ம நபர் மிரட்டல் செய்தியை விடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.

/மும்பை காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று, அதனை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின் தீவிர சோதனை செய்ததில், சந்தேகத்திற்குரிய எதுவும்  கிடைக்காததால் இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தவிர மும்பை முழுவதும் உள்ள 50 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. ஜஸ்லோக் மருத்துவமனை, ரகேஜா மருத்துவமனை, செவ  ன் ஹில்ஸ் மருத்துவமனை, கோகினூர் மருத்துவமனை, கே.இ.எம். மருத்துவமனை, ஜே.ஜே. மருத்துவமனை மற்றும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கும் மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

மும்பை காவல்துறையினர் வி.பி.என். நெட்வொர்க்கை பயன்படுத்தி இ-மெயில்கள் அனுப்பப்பட்டு உள்ளன என்று தெரிவித்தனர்  நேற்று இரவு மும்பையில் உள்ள இந்துஜா வர்த்தக கல்லூரிக்கும் இ-மெயில் ஒன்று வந்தது. அதில், கல்லுரியை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவோம் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

எனவே உள்ளூர் காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழு ஆகியோர் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அறிவிக்கப்ப்ட்டுள்ளது.