டெல்லி:  வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ஏர் இந்தியா மும்பை-நியூயார்க் விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

விமான பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளும் விடாமுயற்சியுடன் பின்பற்றப்படு கின்றன என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால் பயணிகள் பீதியடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2மணி அளவில் நியூயார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம்  புறப்பட்டது.  இதில் அதிகாலை 2 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து விமானம் கிளம்பியது. ஏர் இந்தியாவின் ஏஐ 119 என்ற விமானம் மும்பையில் இருந்து நியூயார் நகருக்கு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது.

இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதி உடனடியாக விமானிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து,  ஏர் இந்தியா விமானத்தை உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பயணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால்,  வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.  மேலும் விமானம் தரையிறக்குவதுதொடர்பாக உடனடியாக டெல்லி விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.  பின்னர் அவசர அவசரமாக இந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.  அதைத்தொடர்ந்து, விமான பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று விமானத்தை சோதனையிட்டனர்.

விரிவான பாதுகாப்பு நெறிமுறைகள் அமலில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்தில் விமானம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதை டெல்லி போலீசார் உறுதிப்படுத்தினர். AI119 என்ற விமானம், அரசாங்கத்தின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பிவிடப்பட்டது. டெல்லியில் தரையிறங்கிய பிறகு, அனைத்து பயணிகளும் பத்திரமாக இறங்கினர் மற்றும் முனையத்திற்கு மாற்றப்பட்டனர் என்று விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விமானம் தற்போது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, மேலும் விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து நிலையான பாதுகாப்பு நெறிமுறைகளும் விடாமுயற்சியுடன் பின்பற்றப்படுகின்றன  என மூத்த போலீஸ் அதிகாரி  தெரிவித்தார்.

சோதனையில்,  விமானத்தில் எந்தவித வெடிபொருளும் இல்லை என்பது தெரிய வந்தது.

இதற்கிடையில்,  பயணிகள் மாற்று விமானம் மூலம்  நியூயார்க்குக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏற்கனவே கடந்த மாதம் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலையடுத்து மும்பையில் இருந்து புறப்பட்ட விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.