
டில்லி
வித்தியாசமான வடிவத்தில் செல்ஃபோனுக்கான பவர் பேங்க் வைத்திருந்த பயணியால் டில்லி விமான நிலையத்தில் பதட்டம் ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு தலை நகர் டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அகமதாபாத் செல்லும் கோ ஏர் விமானத்தில் செல்லும் பயணிகளுக்கான உடமைகள் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணியின் பையில் கையெறி குண்டு வடிவத்தில் ஒரு பொருள் இருந்துள்ளது. அதனால் விமான நிலையத்தில் பதட்டம் உண்டாகியது.
அந்தப் பயணி விமானத்தில் ஏறுவதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் அந்தப் பொருள் செல்வோனுக்கு சார்ஜ் செய்யும் பவர் பேங்க் என்பது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு அந்த பயணி விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உறுதி செய்த கோ ஏர் விமான நிறுவனம் இந்த பவர் பேங் வடிவத்தினால் விமான நிலையத்தில் கடும் பதட்டம் உண்டாகியது எனக் கூறி உள்ளது.
[youtube-feed feed=1]