வாஷிங்டன்: விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு  ஜூன் 5;நந்தேதி நாசா ஆராய்ச்சியாளர்கள  சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை ஏற்றிச்சென்ற விண்கலம்  பழுதான நிலையில்,  இன்று, விண்வெளி வீரர்கள் இல்லாமல்  வெற்றிகரமாக  இன்று  பூமிக்கு திரும்பியது.

நியூமெக்சிகோ ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் பாராசூட் உதவியுடன் தரையிறக்கம் செய்யப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஜூன் 5ந்தேதி  சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் நாசா, ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் வெற்றிகரமாக சென்றடைந்த நிலையில், அடுத்த  சில நாட்களில்  சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) கிளப்ப திட்டமிடப்பட்டது. மிஷன் அதிகாரிகள் ஜூன் 18ஆம் தேதி ஸ்டார்லைனரை நிலையத்திலிருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால்,  விண்கலத்தில் எற்பட்ட சில கோளாறு உள்பட பல்வேறு காரணங்களால் திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து  விண்கலத்தில் உள்ள பழுதடைந்த பாகங்களை பழுது பார்க்கும் பணி நடைபெற்றதால், ஏற்கனவே திட்டமிட்டிருந்த,   வானிலை நிலைமைகள் மற்றும் ISS இல் உள்ள மற்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடப்பது போன்ற ISS திட்டமிடல் விஷயங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இதனால் விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்பட பலர் பூமிக்கு திரும்ப முடியாத நிலை உருவானது.

இதையடுத்து விண்கலம் பழுது நீக்கப்பட்ட விரைவில் தரைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஸ்டார்லைனரின் உந்துவிசை அமைப்பில் கூடுதல் ஹீலியம் கசிவு அடையாளம் காணப்பட்டது. இதனால், ஸ்டார் லைனர் பூமிக்கு திரும்புவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது.  இதற்கிடையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்து வருபவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தேவையான வசதிகள் மற்றொரு விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து ஸ்டார் லைனர் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்ப வைக்கும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது.  நாசா ஆபத்து மிகவும் பெரியதாகக் கருதிய  நிலையில்,  ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த புறப்பட்டு, வெற்றிகரமான இன்று பூமிக்கு திரும்பி உள்ளது.