போயிங் நிறுவனம் நான்காவது காலாண்டில் $3.8 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் காரணமாக போயிங் விமான உற்பத்தி நிறுவனம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2019 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேக்ஸ் ஜெட் விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானதில் 346 உயிரிழந்ததை அடுத்து அந்த ஆண்டு முதல் 35 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளது.
2024ம் ஆண்டில் மட்டும் மொத்தமாக $11.8 பில்லியன் இழப்பைப் பதிவு செய்தது.
இதனால் போயிங்கின் ஒரு பங்குக்கு $5.46 இழப்பு ஏற்பட்டுள்ளது, இது வால் ஸ்ட்ரீட் ஆய்வாளர்கள் எதிர்பார்த்த $3.08 இழப்பை விட மிக அதிகம் என்று தரவு நிறுவனமான ஃபேக்ட்செட் தெரிவித்துள்ளது.