பெங்களூரு: அமெரிக்க நிறுவனமான ‘போயிங்’ விமான நிறுவனம், தனது இந்தியா கிளையில் 180 பணியாளர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வரும் பிரபல விமான நிறுவனம் போயிங், இந்தியாவில் 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போயிங் நிறுவனம் இந்தியாவில் சுமார் 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது, இவர்கள், பெங்களூருவில் உள்ள அதன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனமான போயிங் நிறுவனம், உலகளாவிய பணியாளர் குறைப்பின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 180 பேர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பணிநீக்கங்கள் குறித்து நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
உலகளவில் விமான நடத்தி வரும் நிறுவனங்களில் போயிங் நிறுவனமும் ஒன்று. இது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் விமான சேவை மட்டுமின்றி விமானங்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைஅலுவலகம், இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல நிறுவனங்கள் கடுமையான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், போயிங் நிறுவனமும் கடுமையான இழப்பை சந்தித்தது. இதைத்தொடர்ந்து, , பொருளாதார ரீதியாக உலகளவில் பல சிக்கல்களை எதிர்கொண்டிரு வரும் போயிங் நிறுவனம் கடந்த ஆண்டில் தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது, பெங்களூர கிளையில் 180 பேரை பணி நீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளது. பெங்கரூளு நிறுவனத்தில் சுமார் 7,000 பேர் பணிபுரியும் நிலையில், முதல்கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையாக, 180 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து போயிங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், நிறுவனத்தில் இருந்து சில ஊழியர்கள் நீக்கப்பட்டாலும், புதிய பதவிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வாடிக்கையாளர்கள், அரசாங்க ஒப்பபந்தங்களில் பாதகம் ஏற்படாத வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக போயிங் அதிகாரிகள் கூறி உள்ளனர்.