புதுடெல்லி:
காங்கிரஸ் இல்லாத, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆன்மா இல்லாத உடல் என்று   மம்தா பானர்ஜியின் கருத்துக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்  பதில் அளித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவார் தலைமை தாங்குவாரா என்று கேட்டதற்கு, “என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணி? ஐக்கிய முற்போக்கு கூட்டணியே இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இது குறித்து முடிவு செய்வோம்” என்றார் தெரிவித்து இருந்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்  வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  பானர்ஜி ஒரு வலுவான மாற்றுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, எதிர்க்கட்சி ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.