ன்னியாகுமரி

ன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்துள்ளதால் கடந்த 3 நாட்களாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கி உள்ளது.

தினமும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம்.

தினமும் இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. வழக்கம்போல் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்க இருந்தபோது திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்து. எனவே படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

காலை 10 மணிக்கு கடலில் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்து விட்டு திரும்பினர். இது போல் தொடர்ந்து 3 நாட்களாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கப்படுகிறது.