நியூயார்க்
இன்று விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலாவை ஜெஃப் பெசோஸ் தலைமையிலான புளூ ஆர்ஜின் குழு வெற்றிகரமாக முடித்துள்ளது.
கடந்த நூற்றாண்டின் இடையில் இருந்து விண்வெளி மற்றும் கிரகங்கள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் இடையே கடும் போட்டிகள் நிலவியது. தற்போதைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணங்களில் பல தனியார் நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன.
பல்வேறு தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதில் குறிப்பாக ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. சென்ற வாரம் யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்குச் சென்றிருந்தார்.
சிறிய ஆன்லைன் புக் விற்பனை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அமேசான் இன்று மிகப் பெரிய ஆன்லைன் சாம்ராஜ்ஜியத்தையே கொண்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இன்று தனது முதல் தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.
இன்று ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கேட் மூலம் ஜெஃப் பெசோஸ் விண்வ்ந்ளி சுற்றுலா மேற்கொண்டார். அவருடன் அவரது சகோதரர், 82 வயதான பைலட் வாலி ஃபங்க் மற்றும் 18 வயது இளைஞர் ஒருவர் விண்வெளிக்குச் சென்று திரும்பினர். புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் இந்த முதல் ராக்கெட்டில் மொத்தம் நான்கு பேர் பயணித்தனர்.
இவர்கள் புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் (New Shepard) விண்வெளிக்குச்சென்றனர். இவர்கள் பயணித்த கேப்ஸ்யூலை விண்ணுக்கு அனுப்பிய பின் இந்த ராக்கெட் முதலில் பாதுகாப்பாகத் திரும்பி வந்தது. பிறகு 6 நிமிடங்கள் கழித்து குழு இருந்த கேப்ஸ்யூலும் பூமிக்குத் திரும்பி வந்தது.
இந்த விண்வெளிப் பயணம் 10 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த 10 நிமிடத்தில் 4 நிமிடங்கள் இக்குழு புவி ஈர்ப்பு விசை இன்றி மிதந்துள்ளனர். இந்த பயணம் மூலம் தனது பல ஆண்டு விண்வெளி பயணக் கனவை முதல்முறையாக ஜெஃப் பெசோஸ் இன்று நிறைவேறி உள்ளார்.