டாக்கா
நடந்து முடிந்த பக்ரித் பண்டிகையையடுத்து வங்கதேச வீதிகளில் இரத்த ஆறு ஓடுவதுபோல படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
ஆனால் அது போட்டோஷாப் எனப்படும் போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் என்று இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பக்ரித் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் ஆடு, மாடுகள் வெட்டி குர்பானி கொடுத்து பகிர்ந்து உண்பது வழக்கம். அதேபோல் வங்கதேச தலைநகர் டாக்காவில் பக்ரித் பண்டிகையன்று கடுமையான மழை பெய்தது.
இதன் காரணமாக மக்கள் ஈத் பண்டிகைக்காக வாங்கப்பட்ட, வளர்க்கப்பட்ட மிருகங்களை தங்கள் வீடுகளுக்கு வெளியே வைத்து பலி கொடுத்துள்ளனர். அதனால் ஏற்பட்ட ரத்தம்தான் இந்த ரத்த ஆறு என்று சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் விவாதிப்பட்டு வந்தது.
ஆனால் இந்தப்படம் போட்டோஷாப் என்னும் சாப்ட்வர் மூலம் வடிவமைக்கப்பட்டது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அருகருகே இருக்கும் இரண்டு படங்களையும் பாருங்கள். மேலே உள்ள மின்சாரக் கம்பிகளுக்கு இடையே இருக்கும் இரு போர்டுகளை இரண்டு படங்களிலும் பாருங்கள். ஒரு அரைகுறை போட்டோஷாப் டிசைனர் செய்த பிழை இதிலே நன்றாக தெரியவரும். தண்ணீரின் நிறைத்தை போட்டோஷாப் மூலம் சிவப்பாக மாற்றும்போது அந்த போர்டுகளும் சிவப்பு நிறத்துக்கு மாறியதை கவனிக்காமல் விட்டுள்ளார்,
இதுபோலத்தான் யாரோ சில விஷமிகள் செய்யும் சதி வேலைகளால் தேவையற்ற குழப்பங்களும், சண்டைகளும் சமூகத்தில் ஏற்படுகின்றன.
தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல பிறருடைய மதத்தையோ நம்பிக்கையையோ விமர்ச்சிப்பவர்கள் தங்கள் பொது அறிவைப் பயன்படுத்தி, மிருகங்களைக் கொன்றாலும்கூட படத்தில் காணப்படுவது போல இரத்த ஆறு ஓடுவது நடைமுறையில் சாத்தியமா என்பதையாவது யோசித்திருக்கலாம்.
credit: http://indianexpress.com/article/trending/trending-in-india/photos-of-normal-dhaka-streets-are-going-viral-again-well-theyre-photoshopped-3036034/