
டில்லி:
நாடு முழுவதும் பரபரப்பையும், பரிதாபத்தை ஏற்படுத்திய, கண்தெரியாத இளம்பெண் டில்லியில் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண், போலீசாரின்மீது நம்பிக்கை இழந்து புகாரை வாபஸ் பெறப்போவதாக தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை, தன்னை இதுகுறித்து யாரும் சந்தித்து பேசவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
கரோல்பாக்கின் மத்திய பகுதியில் சாந்தி என்ற கண்தெரியாத 20 வயதே ஆன இளம்பெண் தனது வயது முதிர்ந்த தாய் மற்றும் சைக்கிள் ரிக் ஷா ஓட்டி வாழ்ந்து வரும் தனது மாமா ஆகியோருடன் வசித்து வந்தார்.‘
இந்நிலையில் கடந்த மே 4ந்தேதி அந்த கண்தெரியாத இளம்பெண் 3 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதை தடுக்க வந்த ரிக் ஷா தொழிலாலி அடித்து கொல்லப்பட்டு தூக்கி தொங்கவிடப்பட்டார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், இந்த புகாரை வாபஸ் பெறப்போவதாக அந்த இளம்பெண் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த இளம்பெண், போலீசார் விசாரணையின்மீது தான் நம்பிக்கை இழந்துவிட்ட தாகவும், தொடர்ந்து வழக்கை மேற்கொள்ள தனக்கு விருப்பமும், அதற்கான வசதிகளும் இல்லை என்று கூறி உள்ளார்.
தனக்கு ஆதரவாக இருந்த மாமா இறந்துவிட்ட நிலையில், தனக்கு குடும்பத்தினர் ஆதரவு இல்லைஎன்றும் கூறி உள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பா இருந்த ரிக்ஷா தொழிலாளி கொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த இளம்பெண்ணுக்கு ஆதரவாக 55 வயதான தாய் மட்டுமே உள்ளார். தற்போது குடும்பத்தை நடத்தவே பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனது சொந்தகிராமத்துக்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ள அவர்கள், தங்களது விவகாரத்தில் காவல்துறையினர் தங்களுக்கு எந்தவித உதவுயும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும், நீதிமன்றம் மற்றும் பொலீசாரின் சட்டரீதியான தொல்லைகளைத் தவிர தங்களது எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், தங்களது உணவு அல்லது பணத்துக்க எந்த உத்தரவாதமும் இல்லை, வழக்கை சமாளிக்க முடியவில்லை என்று அந்த இளம்பெண்ணின் தாய் கூறி உள்ளார்.
இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் தன்னை வந்து சந்தித்து, 25ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஆனால், நாங்கள் 5 ஆயிரம் மட்டுமே பெற்றுக்கொண்டோம், காரணம், நாங்கள் முழு தொகையையும் வைத்திருந்தால், யாராவது எங்களைக் கொன்றிருக்கலாம் அல்லது எங்களைத் திருடியிருப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன். என்றும், எங்களால் அந்த பணத்தை வங்கியில் செலுத்தி அதை நிர்வகிக்க முடியாது என்று என்று கூறினார்.
மேலும், இந்த பலாத்காரம் சம்பவத்திற்கு பிறகு தங்களுக்கு ஆலேசானை கூட வழங்க யாரும் முன்வரவில்லை என்றும், இதுகுறித்து காவல்நிலையத்திற்கு சென்றபோது, அங்கு பெண் போலீசார் எங்களுக்கு உதவி செய்தார். அதன்பிறகு எந்தவொரு தொடர்பும் இல்லை என்ற கண்ணீரோடு கூறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]