காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மசூதியில் குண்டுவெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கலீபா அகா குல் ஜான் மசூதியில், புனித ரமலான் மாத கடைசி வெள்ளியன்று, 100க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தினர்.
அப்போது, மசூதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், உடல் சிதறி 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
[youtube-feed feed=1]