கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றம் அருகே இந்த குண்டு வெடிப்பு சம்வம் நடைபெற்றுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
‘இதனால், உயிர்ச்சேதம் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பணிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.