தர்மபுரி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்த தர்மபுரி சென்ற ஆளுநருக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக ஆளுநர பன்வாரிலால் புரோகித் பல மாநிலங்களிலும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆட்சியாளர் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து தனது ஒவ்வொரு பயணத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அத்துடன் பல பகுதிகளில் அவரே நேரடி ஆய்வும் மேற்கொண்டு வருகிறார். இதற்கு திமுக உட்பட பல எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று தர்மபுரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆய்வுப் பணிக்காக ஆளூனர் தர்மபுரி சென்றார். அங்கு அவருக்கு திமுக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைக் கட்சியினரும் கருப்புக் கொடி காட்டினர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.