பரோடா: அரியானா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இந்துராஜ் நர்வால் வெற்றி பெற்றுள்ளார்.
அரியானாவில் பரோடா தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட யோகேஸ்வர் தத் தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் இந்துராஜ் நர்வாலிடம் பின்னடைவை சந்தித்து வந்தார்.
மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத் தேர்தலில் 1.81 லட்சம் வாக்காளர்களில் 68 சதவீதம் பேர் வாக்கை செலுத்தி இருந்தனர். அதில் காங்கிரஸ் வேட்பாளர் இந்துராஜ் நர்வால் 17,827 வாக்குகளையும், பாஜகவின் யோகேஸ்வர் தத் 13,985 வாக்குகளையும் பெற்றனர்.
இந்த தொகுதியில் அவர் போட்டியிட்டு தோல்வி அடைவது 2வது முறையாகும். கடுமையாக உழைத்தும் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டேன், அதற்கான காரணம் தனக்கு தெரியவில்லை என்று யோகேஸ்வர் தத் கூறி உள்ளார்.