இந்துத்துவக் கட்சியான பாரதீய ஜனதா, பீகார் மக்கள் நலன் சார்ந்த எதையும் பேசாமல், மதம், தேசியவாதம் மற்றும் வகுப்புவாதம் சார்ந்த தனது குமட்டும் பிரச்சாரத்தையே பீகார் தேர்தலில் மேற்கொண்டது.

குறிப்பாக, பிரதமர் மோடி இத்தகையப் பிரச்சாரத்தையே அங்கு மேற்கொண்டார். பீகார் தேர்தலிலும் ராமர் இடம்பெற்றார்.

கொரோனா முடக்கத்தின்போது, வெளிமாநிலங்களில் சிக்கிய பீகார் மாநில கூலித் தொழிலாளர்கள் ஏராளமானோர் மாபெரும் மனித அவலத்தில் சிக்கியதும், பீகார் ரயில் நிலையம் ஒன்றில் தனது தாய் இறந்தது தெரியாமல், குழந்தை ஒன்று எழுப்ப முயன்றுகொண்டிருந்த கொடூரக் காட்சியும் பலரின் மனதிலிருந்து அகலாத ஒன்று.

ஆனாலும், இத்தேர்தலில், பாரதீய ஜனதா கூட்டணியாக வென்றிருப்பதோடு, பீகார் சட்டசபையில் தனிப்பெரும் கட்சி என்ற நிலையை அடைய, லாலு பிரசாத் கட்சியுடன் போட்டிப்போட்டுக் கொண்டுள்ளது.

மதம், தேசியவாதம் ஆகியவற்றிலிருந்து நல்ல வாழ்விற்கான அடிப்படை தேவைகள் என்ன என்பதைப் பிரிக்கத் தெரியாத வாக்காளர்களின் அறிவீனம் என்பது இதற்கொரு முக்கிய காரணமாக இருந்தாலும், வேண்டுமென்றே சிராக் பஸ்வானின் கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேறச் செய்து, தனித்துப் போட்டியிட வைத்து, நிதிஷ்குமார் எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்தது உள்ளிட்ட சில வியூகங்களையும் செய்தது பாரதீய ஜனதா.

மேலும், திட்டமிட்டே, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தை சிறையிலிருந்து வெளியே விடவில்லை. அவரின் நேரடிப் பிரச்சாரம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் ஒரு முக்கிய காரணம்.

இத்தகைய அரசியல் பித்தலாட்டங்களால், பீகார் தேர்தலில் ஓரளவு அக்கட்சி பயனடைந்துள்ளது.

 

[youtube-feed feed=1]