சிவகங்கை: இருசக்கர வாகனத்தில் போலியாக ‘வக்கீல்’, பிஜேபி என்று ஸ்டிக்கர் ஒட்டி அலப்பறை செய்த பாஜக இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கியதும் எஸ்கேப்பாகும் வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கி அபராதம் வசூலித்தும், வழக்கு பதிவும் செய்தும் வந்தனர். அப்போது, அந்த பகுதியில், ஹெல்மெட் போடாமல் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிய காவல்துறையினர், அவரிடம் இருந்த வாகனத்தை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர். அப்போது,அவர் சரியான முறையில் பதில் சொல்லாம்ல், தான் பாஜக நிர்வாகி என கூறி எஸ்கேப்பாக முயன்றார்.
அவரிடம் காவல்துறை அதிகாரி, வாகனத்தில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதே, எந்த கோர்ட்டில் வழக்கறிஞராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், அவர்மீது ஏற்கனவே 2 முறை வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது, அவரை விடாதீர்கள் என்று கூற, அந்த நபரோ, வாகனத்தை விட்டு விட்ட அவர்களிடம் இருந்து எஸ்கேப்பாகும் வீடியோ வெளியாகி உள்ளது.
இதை கண்ட நெடிசன்கள் பாஜக என கூறி அடாவடி செய்பவர்களை ஒடுக்க வேண்டும் என்று கொந்தளித்து வருகின்றனர்.