அகர்தலா
பாஜக திரிபுரா மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 97% இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
.
கடந்த 8 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் மூன்று அடுக்கு கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து சமிதிக்கள் மற்றும் ஜில்லா பரிஷத்துகளில் உள்ள 71 சதவீத இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.
கடந்த 8-ந்தேதி மீதம் உள்ள 29 சதவீத இடங்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்ட நிலையில், இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. பாஜக584 கிராம பஞ்சாயத்துகள், 34 பஞ்சாயத்து சமிதிக்கள் மற்றும் 8 ஜில்லா பரிஷத்துகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மேலும் 8 ஜில்லா பரிஷத்துகளில் உள்ள 96 இடங்களில் பா.ஜ.க. 93 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாயத்து சமிதிக்களை பொறுத்தவரை வாக்குப்பதிவு நடைபெற்ற 188 இடங்களில் பா.ஜ.க. 173 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ராம பஞ்சாயத்துகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற 1,819 இடங்களில் பா.ஜ.க. 1,476 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 148 இடங்களிலும், காங்கிரஸ் 151 இடங்களிலும், திப்ரா மோத்தா 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.