லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில், பாஜக மகளிர் அணி தலைவி ஒருவர், பிரதமர் மோடி வீட்டில் விளக்கு ஏற்றுங்கள் சொன்னதை, வித்தியாசமாக கொண்டாடி உள்ளார்.
தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் கொண்டு, வானத்தை நோக்கி சுட்டு, ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவினர் எப்போதும் வித்தியாசமானவர்கள்தான் என்பதை அவர் நிரூபித்து உள்ளதாக சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி நேற்றிரவு 9 மணி 9 நிமிடங்கள், விளக்கு ஏற்றச் சொல்லியிருந்தார்.
இந்த நிகழ்வை பாஜகவினர், சில இடங்களில் விளக்குகளைக் கொண்டு ஊர்வலமாக கோ கொரோனா என்று கோஷமிட்டு சென்ற நிலையில், பல இடங்களில் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்த நிலையில்தான் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மகளிரணி தலைவர் மஞ்சு திவாரி என்பவர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
“இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக உள்ளூர் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பலர் பட்டாசுவெடித்துக்கொண்டிருந்தனர். தீபாவளி மாதிரி இருந்தது.. அதனால் உற்சாகத்தில் துப்பாக்கியால் சுட்டேன்” என்று கூறியிருந்தார்.
மேலும், மஞ்சு திவாரியை சஸ்பெண்ட் செய்து பாஜக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விளக்கு ஏற்ற சொன்னால், கண்ணுக்கு தெரியாத வைரசனா கொரோனா வைரசை இவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்… என்று நக்கலடித்து வருகின்றனர்.