ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் டுபாக்கா என்ற சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதற்கு முன்னர், இத்தொகுதி ஆளும் டிஆர்எஸ் கட்சியின் வசமிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான தகவலின்படி, 1118 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாரதீய ஜனதா வென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பாரதீய ஜனதா வேட்பாளர் ரகுநந்தன் ராவ் 62772 வாக்குகளும், டிஆர்எஸ் கட்சி 61302 வாக்குகளும், காங்கிரஸ் கட்சி 21819 வாக்குகளும் பெற்றுள்ளன.

தற்போதைய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தோல்வியை ஒப்புக்கொண்டு கூறியுள்ளதாவது, “டுபாக்காவில் எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. எங்களின் வெற்றிக்காக முயன்றவர்களுக்கும் நன்றி. நாம் எதிர்பார்த்ததைப் போன்று முடிவுகள் வரைவில்‍லை. இந்த முடிவிற்கான காரணங்களை ஆழமாக ஆராய்வோம்” என்றுள்ளார் அவர்.

ஒரு சாதாரண தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு, டிஆர்எஸ், பா.ஜ. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு கெளரவப் பிரச்சினையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.