டில்லி

பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காது என கூறி உள்ளார்.

இந்திய பங்குவர்த்தக சந்தையில் மிகவும் புகழ்பெற்ற முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பொருளாதாரம் மற்றும் அரசியல் உலகிலும் புகழ் பெற்றவராவார். இவருடைய கணிப்புக்களுக்கு அனைத்து துறையிலும் ஒரு தனி எதிர்பார்ப்பு உள்ளது. அவர் ஏற்கனவே இந்த தேர்தலில் மும்முனை தாக்குதல் இருக்க வாய்ப்புளதாக தெரிவித்தது போலவே காங்கிரஸ். பாஜக மற்றும் மூன்றாவது அணி களத்தில் உள்ளன.

நேற்று ராகேஷ் ஜுன்ஜுன்வாலா,”கடந்த 40 ஆண்டுகளாக சந்தை பணப்புழக்கத்தால் எந்த ஒரு ஏழையும் பலனடையவில்லை. அது இந்த ஐந்து வருடங்களில் மிகவும் அதிக்ரித்துளது. பல முக்கிய பொருளாதார நிகழ்வுகள் சரியான பாதுகாப்பின்றி நடந்துள்ளன. தற்போதைய நிலையில் தேர்தல் முடியும் வரை முதலீடு செய்வதை குறைத்துக் கொள்வது நல்லதாகும்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் அடுத்த அமைய உள்ள அரசில் பாஜக ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கம் ஏற்படலாம்” என தெரிவித்துள்ளார்.