புதுடெல்லி:
பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதுகுறித்து ட்விட்டரில் பல்வேறு கிண்டலான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச் 5-ம் தேதி பாஜகவின் அதிகாரப்பூர்வ இணைய தளம் ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்டது.
சகோதர,சகோதரிகளே, நான் உங்களை முட்டாளாக்குவேன். என்னை நீங்கள் முட்டாளாக்குங்கள். நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்வோம். வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி சொல்வதைப் போல் மீம்ஸ் போட்டுள்ளனர்.
மோடியை கிண்டல் செய்து பாடல் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.
பாஜக இணையதளம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதாக சொல்லப்பட்டது. 6 நாட்களாகியும் பராமரிப்பு பணி இன்னும் முடியவில்லை.
கோயிலை முதலில் கட்டவேண்டுமா? இணையதளத்தை முதலில் கட்டமைக்க வேண்டுமா? என ட்விட்டரில் பதிவுகள் அணிவகுத்து வந்துகொண்டிருக்கின்றன.
பாஜக இணையதளம் முடக்கப்பட்டதற்கு நேரு காரணமாக இருக்குமோ? என்றும் பதிவிட்டு பகடி செய்துள்ளனர்.