டில்லி:
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப்பின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ள தகவலில், “தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மோடியை தொடர்புகொண்டு வாழ்த்தியதாகவும், அவர். இந்திய மக்களுக்கு மிகப்பெரிய தலைவராகவும், சிறந்த மனிதராகவும் அவர் உள்ளார். இந்திய மக்கள் அதிர்ஷ்ட சாலிகள். மோடி மீண்டும் பதவிக்கு வந்ததன் மூலம் இந்திய – அமெரிக்க உறவு மேலும் வலுவடையும். அவருடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்” என்று கூறி உள்ளார்.